இயேசுவே உம் நாமத்தினால் | Yesuvae Um Naamathinaal | Tamil Christian Song
1
இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே
எங்கள் தேவனே எங்கள் ராஜனே
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்
2
நிலையில்லா இவ்வுலகில்
நெறி தவறி நாம் அலைந்தோம்
நின்னொளி பிரகாசித்திட
நீங்கா ஜீவன் பெற்றிடவே
எங்கள் தேவனே எங்கள் ராஜனே
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்
3
பொன்னை நாடி மண்ணையடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால்
எங்கள் தேவனே எங்கள் ராஜனே
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்
4
உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ ஓ பாவியே
இன்றும் இயேசுவண்டை வாராயோ
நித்திய ஜீவன் பெற்றிடவே
எங்கள் தேவனே எங்கள் ராஜனே
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்
5
இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பெலத்தால்
எங்கள் தேவனே எங்கள் ராஜனே
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்
இயேசுவே உம் நாமத்தினால் | Yesuvae Um Naamathinaal | Tamil Christian Song | Pauline Matthew / New Life Church Dublin, Dublin, Ireland