உன்னதமான ஸ்தலத்தில் | Unnadhamaana Sthalathil | Tamil Christian Song

உன்னதமான ஸ்தலத்தில் | Unnadhamaana Sthalathil | Tamil Christian Song

1           
உன்னதமான ஸ்தலத்தில்
மா ஆழமுள்ள இடத்தில்
கர்த்தாவே நீர் இருக்கிறீர்
எல்லாவற்றையும் பார்க்கிறீர்

2   
என் அந்தரங்க எண்ணமும்
உமக்கு நன்றாய்த் தெரியும்
என் சுகதுக்கம் முன்னமே
நீர் அறிவீர் என் கர்த்தரே

3   
வானத்துக்கேறிப் போயினும்
பாதாளத்தில் இறங்கினும்
அங்கெல்லாம் நீர் இருக்கிறீர்
தப்பாமல் கண்டுபிடிப்பீர்

4   
காரிருளில் ஒளிக்கினும்
கடலைத் தாண்டிப் போயினும்
எங்கே போனாலும் தேவரீர்
அங்கென்னைச் சூழ்ந்திருக்கிறீர்

5   
ஆராய்ந்து என்னைச் சோதியும்
சீர்கேட்டை நீக்கி ரட்சியும்
நல்வழி தவறாமலே
நடத்தும் எந்தன் கர்த்தரே

உன்னதமான ஸ்தலத்தில் | Unnadhamaana Sthalathil | Tamil Christian Song | CSI Christ Church Ambattur, Ambattur, Chennai, Tamil Nadu, India

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in:


Don`t copy text!