உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் | Unnathamanavarin Uyar Maraivil Irukiravan | Tamil Christian Song
1
உன்னதமானவரின் – உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
2
தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
3
இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன்
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
4
ஆயிரம் பதினாயிரம்
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
5
தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார்
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
6
உன் வழிகளிலெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார்
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
7
சிங்கத்தின் மேலும் நடந்து
வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்து காத்திடுவார்
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
8
ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர்
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் | Unnathamanavarin Uyar Maraivil Irukiravan | Tamil Christian Song | Sam Jabez, Agnes Lydia / Bethel AG Church, Kolathur, Chennai, Tamil Nadu, India | Sarah Navaroji
உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் | Unnathamanavarin Uyar Maraivil Irukiravan | Tamil Christian Song | Pauline Matthew / New Life Church Dublin, Dublin, Ireland | Sarah Navaroji