கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் | Geetham Geetham Jeya Jeya Geetham | Tamil Christian Song

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் | Geetham Geetham Jeya Jeya Geetham | Tamil Christian Song

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் ஆ ஆ

1
பார் அதோ கல்லறை மூடினப் பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் – அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதிமுன் ஆ ஆ

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் ஆ ஆ

2
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுவோம் – தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு ஆ ஆ

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் ஆ ஆ

3
அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார் ஆ ஆ

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் ஆ ஆ

4
வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரன் – நாமம்
மேள வாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம் ஆ ஆ

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் ஆ ஆ

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் | Geetham Geetham Jeya Jeya Geetham | Tamil Christian Song | New Life Church Dublin, Dublin, Ireland

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in:


Don`t copy text!