எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான் | Enthan Anbulla Aandavar Yesuvai Naan | Tamil Christian Song

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான் | Enthan Anbulla Aandavar Yesuvai Naan | Tamil Christian Song

1
எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வம் நீரே

ஆ ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே

2
பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே

ஆ ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே

3
உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே

ஆ ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே

4
எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே

ஆ ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே

5
பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
போதும் எனக்கு நீரே

ஆ ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான் | Enthan Anbulla Aandavar Yesuvai Naan | Tamil Christian Song | Grace Joshua | Sarah Navaroji

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான் | Enthan Anbulla Aandavar Yesuvai Naan | Tamil Christian Song | Bethel AG Church, Kolathur, Chennai, Tamil Nadu, India | Sarah Navaroji

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!