பிரியமானவனே / பிரியமானவளே / Piriyamaanavanae / Piriyamaanavalae | Tamil Christian Song
பிரியமானவனே உன்
ஆத்துமா வாழ்வது போல் நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே
பிரியமானவளே உன்
ஆத்துமா வாழ்வது போல் நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகளே
1
வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்து போராடி வெற்றி பெறு
எடுத்து போராடி வெற்றி பெறு
பிரியமானவனே உன்
ஆத்துமா வாழ்வது போல் நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே
2
பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான்கால்கள் உனக்குண்டு மறவாதே
மான்கால்கள் உனக்குண்டு மறவாதே
பிரியமானவளே உன்
ஆத்துமா வாழ்வது போல் நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகளே
3
ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓட மகனே
ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓட மகளே
நெருங்கிவரும் பாவங்களை
நெருங்கிவரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகளே
பிரியமானவளே உன்
ஆத்துமா வாழ்வது போல் நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே
பிரியமானவளே உன்
ஆத்துமா வாழ்வது போல் நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகளே
பிரியமானவனே / பிரியமானவளே / Piriyamaanavanae / Piriyamaanavalae | Tamil Christian Song | Tamil Arasi / Elshadai Gospel Church, Kuwait | S J Berchmans