ஆ இயேசுவே நீர் என் பலியானீர் | Aa Yesuve Neer En Baliyaneer | Tamil Christian Song

ஆ இயேசுவே நீர் என் பலியானீர் | Aa Yesuve Neer En Baliyaneer | Tamil Christian Song

1
ஆ இயேசுவே நீர்
என் பலியானீர்
பாவி உம்மை அகற்ற கல்வாரி சென்றீர்
மன்றாடிடுவீர்
இப்பாவிக்காய் நீர்
என்னைக் கொன்றோருக்காய்
உயிர் ஈந்தேன் என்பீர்

2
இறங்கிடுமேன்
அகற்றிடுமேன்
உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை
சிலுவை அன்பால்
என்னை இழுத்தால்
ஆவேன் விடுதலை பாவியாம்
அடிமை

3
கோபம் பெருமை
போக்கும் சிலுவை
அகற்றுமே தூய ரத்தமும்
தோஷத்தை
தீய மனத்தை
பாவ பாரத்தை
அகற்றி ரத்தத்தால் சேர்த்திடும்
உம்மண்டை

4
தூய வெண்மையே
இப்போ இப்போதே
உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே
தூயோன் ஆக்குவீர்
முற்றும் மாற்றுவீர்
உந்தன் சாயல் என் வாழ்க்கையில்
உண்டாக்குமே

5
உம் ரத்தம் என்னில்
நிலைத்திருப்பின்
ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்
பிதாவின் முன்னர்
சகாயராம் நீர்
சுதா பாவியேனை உம் அன்பால்
வாழ்விப்பீர்

ஆ இயேசுவே நீர் என் பலியானீர் | Aa Yesuve Neer En Baliyaneer | Tamil Christian Song | CSI Christ Church Ambattur, Ambattur, Chennai, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!