விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா | Vinnorgal Potrum Aandavaa | Tamil Christian Song
1
விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா
உம் மேன்மை அற்புதம்
பளிங்கு போலத் தோன்றுமே
உம் கிருபாசனம்
2
நித்தியானந்த தயாபரா
அல்பா ஒமேகாவே
மா தூயர் போற்றும் ஆண்டவா
ராஜாதி ராஜாவே
3
உம் ஞானம் தூய்மை வல்லமை
அளவிறந்ததே
நீர் தூயர் தூயர் உந்தனை
துதித்தல் இன்பமே
4
அன்பின் சொரூபி தேவரீர்
நான் பாவியாயினும்
என் நீச நெஞ்சைக் கேட்கிறீர்
உம் சொந்தமாகவும்
5
உம்மைப் போல் தயை மிகுந்த
ஓர் தந்தையும் உண்டோ
உம்மைப்போல் அன்பு நிறைந்த
தாய்தானும் ஈண்டுண்டோ
6
என் பாவமெல்லாம் மன்னித்தீர்
சுத்தாங்கம் நல்கினீர்
என் குற்றமெல்லாம் தாங்கினீர்
அன்பின் பிரவாகம் நீர்
7
மேலோக நித்திய பாக்கியத்தை
நான் பெற்று வாழுவேன்
உம் திவ்விய இன்ப முகத்தை
கண்ணுற்றுப் பூரிப்பேன்
விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா | Vinnorgal Potrum Aandavaa | Tamil Christian Song | CSI Church Of The Good Shepherd Mylapore, Mylapore, Chennai, India