வானகம் வாழ்ந்திடும் | Vanagam Vaazhndhidum | Tamil Christian Song

வானகம் வாழ்ந்திடும் | Vanagam Vaazhndhidum | Tamil Christian Song

1
வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய்
வாழ்க உம் திருநாமம்
வருக உம் அரசு பெருக உம் விருப்பம்
வாழ்க உம் திருநாமம்

2
வானகம் போல வையகம் தனிலும்
வாழ்க உம் திருநாமம்
தினமெங்கும் உணவை தயவுடன் தாரும்
வாழ்க உம் திருநாமம்

3
பாவங்கள் யாவும் பொறுத்தெமை ஆளும்
வாழ்க உம் திருநாமம்
பிறர் பிழை நாங்கள் பொறுப்பது போல
வாழ்க உம் திருநாமம்

4
சோதனை நின்றெமை விலக்கியே காரும்
வாழ்க உம் திருநாமம்
தீவினையிருந்தே மீட்டிட வாரும்
வாழ்க உம் திருநாமம்

5
ஆட்சியும் ஆற்றலும் அனைத்துள மாண்பும்
வாழ்க உம் திருநாமம்
இன்றுபோல் என்றும் இறைவனே உமதே
வாழ்க உம் திருநாமம்

6
ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென்
வாழ்க உம் திருநாமம்
ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென்
வாழ்க உம் திருநாமம்

வானகம் வாழ்ந்திடும் | Vanagam Vaazhndhidum | Tamil Christian Song | T Edward Daniel / CSI St. Andrew’s Church in Kundankulam, Tirunelveli, Tamil Nadu, India

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in:


Don`t copy text!