tholugirom

தொழுகிறோம் எங்கள் பிதாவே | Tholugirom Engal Pithave | Tamil Christian Song

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

1
வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம்

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

2
தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம் சரணம்

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

3
கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம்

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

4
கரங்கள் பொன் வளையல்கள் போல
நிறங்களும் தந்தத்தைப் போல
கால்களும் கல் தூண்கள் போல
காண்பதாலே சரணம் சரணம்

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

5
சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதானம் எம் மூலைக்கல்லே
ஏராளமாய் சரணம் சரணம்

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

6
அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம்

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

7
பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென்

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

தொழுகிறோம் எங்கள் பிதாவே | Tholugirom Engal Pithave | Tamil Christian Song | Pauline Matthew / New Life Church Dublin, Dublin, Ireland

Don`t copy text!