ஸ்தோத்திரம் செய்வனே | Sthothiram Seivanae | Tamil Christian Song
ஸ்தோத்திரம் செய்வனே | Sthothiram Seivanae | Tamil Christian Song
ஸ்தோத்திரம் செய்வனே ரட்சகரைத்
ஸ்தோத்திரம் செய்வேனே
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணை வைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும்
ஸ்தோத்திரம் செய்வனே ரட்சகரைத்
ஸ்தோத்திரம் செய்வேனே
1
அன்னை மறி சுதனை புல் மீது
அமிழ்து கழுதவனை
முனனணை மீதுற்ற சின்ன குமாரனை
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை
ஸ்தோத்திரம் செய்வனே ரட்சகரைத்
ஸ்தோத்திரம் செய்வேனே
2
கந்தை போதிந்தவனை வானோர்களும்
வந்தடி பணிபவனை
மந்தையர்க் கானந்த மாட்சிய யளித்தோனை
வான பரன் என்னும் ஞான குண வானை
ஸ்தோத்திரம் செய்வனே ரட்சகரைத்
ஸ்தோத்திரம் செய்வேனே
3
செம்பொன் னுருவானை தேசிகர்கள்
தேடும் குருவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி
ஸ்தோத்திரம் செய்வனே ரட்சகரைத்
ஸ்தோத்திரம் செய்வேனே
ஸ்தோத்திரம் செய்வனே | Sthothiram Seivanae | Tamil Christian Song | Pauline Matthew / New Life Church Dublin, Dublin, Ireland | Thanjai Sathyanathan Pillai