ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே | Osanna Paaduvom Yesuvin Dhasarae | Tamil Christian Song
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே | Osanna Paaduvom Yesuvin Dhasarae | Tamil Christian Song
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா
1
முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்ன பாலர் பாடினார்
அன்று போல இன்றும் நாமும் ஒன்றாய் துதி பாடுவோம்
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா
2
சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா
3
பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா
4
பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணை யோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா
5
குருத்தோலை ஞாயிற்றில் நம் குரு பாதம் பணிவோம்
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே | Osanna Paaduvom Yesuvin Dhasarae | Tamil Christian Song | Pauline Matthew / New Life Church Dublin, Dublin, Ireland