nadathiyavar

நடத்தியவர் | கடந்து வந்த பாதையில் | Nadathiyavar / Kadanthu Vantha Pathaiyil | Tamil Christian Song

கடந்து வந்த பாதையில் கண்ணீர் சிந்தும் வேளையில்
நம்பினோர் கைவிட்டனரே அன்று நானும்
தனிமையில் நின்று தவித்தேனே

நினையாத வேளையில் உடைந்த என் கதையில்
காதலனாய் தேவன் வந்தீரே
பிரியாத ஓர் காதலை எனக்கு தந்தீரே

நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனே
நடத்தி வந்த பாதைகள் கண்ணீர் சுவடுகள்
திரும்பி பார்க்கின்றேன் அவை தான் இன்று இன்பங்கள்

நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனே
நடத்தி வந்த பாதைகள் கண்ணீர் சுவடுகள்
திரும்பி பார்க்கின்றேன் அவை தான் இன்று இன்பங்கள்

1
நம்பி இருந்த மனிதரும் சூழ்நிலையால் கைவிட
நற்றாற்றில் தவித்து நின்றேனே அன்றும் கூட
விசாரிக்க ஒருவர் இல்லையே

வலி தெரியா என்னையும் உடைந்த என் மனதையும்
காயம் கட்டி நடத்தி வந்தீரே
புதியதோர் மனிதனாய் என்னை மாற்றினீர்

நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனே
நடத்தி வந்த பாதைகள் கண்ணீர் சுவடுகள்
திரும்பி பார்க்கின்றேன் அவை தான் இன்று இன்பங்கள்

நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனே
நடத்தி வந்த பாதைகள் கண்ணீர் சுவடுகள்
திரும்பி பார்க்கின்றேன் அவை தான் இன்று இன்பங்கள்

2
தள்ளப்பட்ட என்னையும் உலகம் அதின் பார்வையில்
தோற்றத்தால் நீதி செய்ததே ஆனால் நீரோ
கூட நின்று தோள் கொடுத்தீரே

கிரகிக்க கூடா நன்மைகள் செய்த உம் அன்பிற்காய்
என்ன தான் ஈடாய் குடுப்பேனோ
உம் சார்பிலே பிறருக்கு பாதை காட்டுவேன்

நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனே
நடத்தி வந்த பாதைகள் கண்ணீர் சுவடுகள்
திரும்பி பார்க்கின்றேன் அவை தான் இன்று இன்பங்கள்

நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனே
நடத்தி வந்த பாதைகள் கண்ணீர் சுவடுகள்
திரும்பி பார்க்கின்றேன் அவை தான் இன்று இன்பங்கள்

நடத்தியவர் | கடந்து வந்த பாதையில் | Nadathiyavar / Kadanthu Vantha Pathaiyil | Tamil Christian Song | Jonal Jeba

Don`t copy text!