சுத்த ஆவி என்னில் தங்கும் | Sutha Aavi Yennil Thangum | Tamil Christian Song
சுத்த ஆவி என்னில் தங்கும் | Sutha Aavi Yennil Thangum | Tamil Christian Song
1
சுத்த ஆவி என்னில் தங்கும்
நானும் சுத்தன் ஆகவே
பாவ அழுக்கெல்லாம் நீக்கும்
உம் ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும்
வாசம் பண்ணும் நித்தமும்
2
சத்திய ஆவி என்னில் தங்கும்
நானும் சத்தியன் ஆகவே
தெய்வ பக்தி என்னில் முற்றும்
வளர்ந்தேறச் செய்யுமே
நீர் என்னில் பிரவேசியும்
ஆண்டுகொள்ளும் நித்தமும்
3
நேச ஆவி என்னில் தங்கும்
நானும் நேசன் ஆகவே
துர்ச் சுபாவம் போகப்பண்ணும்
அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸ்வாலை எழுப்பும்
மென்மேலும் வளர்த்திடும்
4
வல்ல ஆவி என்னில் தங்கும்
நானும் வல்லோன் ஆகவே
சாத்தான் என்னைத் தூண்டிவிடும்
போது ஜெயங்கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும்
என்னைப் பலப்படுத்தும்
5
நல்ல ஆவி என்னில் தங்கும்
நானும் நல்லோன் ஆகவே
பகை மேட்டிமை விரோதம்
மற்றும் தீமை யாவுமே
என்னை விட்டகற்றுமேன்
என்னைச் சீர்ப்படுத்துமேன்
6
தெய்வ ஆவி என்னில் தங்கும்
நானும் உம்மில் தங்கவே
மோட்ச பாதையில் நடத்தும்
இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும்
என்னை முற்றும் ரட்சியும்
சுத்த ஆவி என்னில் தங்கும் | Sutha Aavi Yennil Thangum | Tamil Christian Song | CSI St. Mark’s Church, East Tambaram, Selaiyur, Chennai, Tamil Nadu, India