ஓசன்னா பாலர் பாடும் | Osanna Paalar Paadum | Tamil Christian Song
ஓசன்னா பாலர் பாடும் | Osanna Paalar Paadum | Tamil Christian Song
ஓசன்னா பாலர் பாடும்
ராஜாவாம் மீட்பர்க்கே
மகிமை புகழ் கீர்த்தி
எல்லாம் உண்டாகவே
1
கர்த்தாவின் நாமத்தாலே
வருங் கோமானே நீர்
தாவீதின் ராஜ மைந்தன்
துதிக்கப்படுவீர்
2
உன்னத தூதர் சேனை
விண்ணில் புகழுவார்
மாந்தர் படைப்பு யாவும்
இசைந்து போற்றுவார்
3
உம்முன்னே குருத்தோலை
கொண்டேகினார் போலும்
மன்றாட்டு கீதம் ஸ்தோத்ரம்
கொண்டும்மைச் சேவிப்போம்
4
நீர் பாடுபடுமுன்னே
பாடினார் யூதரும்
உயர்த்தப்பட்ட உம்மை
துதிப்போம் நாங்களும்
5
அப்பாட்டைக் கேட்டவண்ணம்
எம் வேண்டல் கேளுமே
நீர் நன்மையால் நிறைந்த
காருணிய வேந்தரே
ஓசன்னா பாலர் பாடும் | Osanna Paalar Paadum | Tamil Christian Song | Yogil, Yobin
ஓசன்னா பாலர் பாடும் | Osanna Paalar Paadum | Tamil Christian Song | CSI St. Mark’s Church, East Tambaram, Selaiyur, Chennai, Tamil Nadu, India
ஓசன்னா பாலர் பாடும் | Osanna Paalar Paadum | Tamil Christian Song | CSI Christ Church Ambattur, Ambattur, Chennai, Tamil Nadu, India