east

அனுக்ரக வார்த்தையோடே | Anukraka Varthaiyode | Tamil Christian Song

1
அனுக்ரக வார்த்தையோடே இப்போ
தடியாரை அனுப்புமையா
மனமதில் தயவுறும் மகத்துவபரனே
வந்தனம் உமக்காமென்

2
நின்திரு நாமமதில் கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.

3
தோத்திரம் புகழ் மகிமை கீர்த்தி
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே அதிசோபித பரனே
பாதசரண் ஆமென்

அனுக்ரக வார்த்தையோடே | Anukraka Varthaiyode | Tamil Christian Song | CSI St. Mark’s Church, East Tambaram, Selaiyur, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!