dublin

ஆனந்தமே ஜெயா ஜெயா | Anandhamae Jeya Jeya | Tamil Christian Song

ஆனந்தமே ஜெயா ஜெயா
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

ஞானரட்சகர் நாதர் நமை இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் புகழ்

1
சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் புகழ்

ஆனந்தமே ஜெயா ஜெயா
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

2
முந்து வருடமதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் புகழ்

ஆனந்தமே ஜெயா ஜெயா
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

3
பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை இத்
தரைதனில் குறைதணித் தாற்றியதால் புகழ்

ஆனந்தமே ஜெயா ஜெயா
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

ஆனந்தமே ஜெயா ஜெயா | Anandhamae Jeya Jeya | Tamil Christian Song | Pauline Matthew / New Life Church Dublin, Dublin, Ireland

Don`t copy text!