aar

ஆர் இவர் ஆராரோ | Aar Ivar Aaraaro | Tamil Christmas Song

ஆர் இவர் ஆராரோ இந்த
அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய்
உதித்த இவ்வற்புத பாலகனார்

1
பாருருவாகுமுன்னே இருந்த
பரப் பொருள் தானிவரோ
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருட்டித்த மாவலரோ

ஆர் இவர் ஆராரோ இந்த
அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய்
உதித்த இவ்வற்புத பாலகனார்

2
மேசியா இவர்தானோ நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்
அதி அன்புள்ள மனசானோ

ஆர் இவர் ஆராரோ இந்த
அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய்
உதித்த இவ்வற்புத பாலகனார்

3
தித்திக்குந் தீங்கனியோ நமது
தேவனின் கண்மணியோ
மெத்தவே உலகிறுள் நீக்கிடும்
அதிசயமேவிய விண்ணொளியோ

ஆர் இவர் ஆராரோ இந்த
அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய்
உதித்த இவ்வற்புத பாலகனார்

4
பட்டத்துத் துரைமகனோ நம்மைப்
பண்புடன் ஆள்பவனோ
கட்டளை மீறிடும் யாவர்க்கும்
மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ

ஆர் இவர் ஆராரோ இந்த
அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய்
உதித்த இவ்வற்புத பாலகனார்

5
ஜீவனின் அப்பமோதான் தாகம்
தீர்த்திடும்பானமோதான்
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
அடைக்கல மானவர் இவர்தானோ

ஆர் இவர் ஆராரோ இந்த
அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய்
உதித்த இவ்வற்புத பாலகனார்

ஆர் இவர் ஆராரோ | Aar Ivar Aaraaro | Tamil Christmas Song | Pauline Matthew / New Life Church Dublin, Dublin, Ireland

Don`t copy text!