காக்கும் கரங்கள் உண்டெனக்கு | Kakkum Karangal Undenakku | Tamil Christian Song

காக்கும் கரங்கள் உண்டெனக்கு | Kakkum Karangal Undenakku | Tamil Christian Song

1
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை
நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை

2
நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன்

நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை
நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை

3
கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போலே எழும்பிடுவாய்

நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை
நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை

4
அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை

நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை
நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை

காக்கும் கரங்கள் உண்டெனக்கு | Kakkum Karangal Undenakku | Tamil Christian Song | Anita Kingsly

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in:


Don`t copy text!