ஆத்மமே உன் ஆண்டவரின் | Aathmame Un Aandavarin | Tamil Christian Song

ஆத்மமே உன் ஆண்டவரின் | Aathmame Un Aandavarin | Tamil Christian Song

1
ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து
மீட்பு சுகம் ஜீவன் அருள்
பெற்றதாலே துதித்து
அல்லேலுயா என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று

2
நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய் துதி
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி
அல்லேலுயா அவர் உண்மை
மா மகிமையாம் துதி

3
தந்தை போல் மா தயை உள்ளோர்
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
அல்லேலுயா இன்னும் அவர்
அருள் விரிவானதே

4
என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுத்து
பணிவர் நீர் பக்தரே
அல்லேலுயா அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே

ஆத்மமே உன் ஆண்டவரின் | Aathmame Un Aandavarin | CSI St. Mark’s Church, East Tambaram, Selaiyur, Chennai, Tamil Nadu, India

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in:


Don`t copy text!