ஆண்டவர் பங்காக | Aandavar Pangaga | Tamil Christian Song

ஆண்டவர் பங்காக | Aandavar Pangaga | Tamil Christian Song

ஆண்டவர் பங்காக அனைத்தையும் அவர்க்கே
அன்பர்களே தாரும் அதால் வரும்
இன்பந்தனைப் பாரும்

வான்பல கணிகளைத் திறந்தாசீர்
வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்
நான் தருவேன் பரிசோதியுங்களென்று
ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்

ஆண்டவர் பங்காக அனைத்தையும் அவர்க்கே
அன்பர்களே தாரும் அதால் வரும்
இன்பந்தனைப் பாரும்

1
வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்
விண்ணவர் கோமானே அந்த
மேதகத்தை நன்றி ஞாபகம் செய்திட
விதித்தது தானே

வேதனம் வியாபாரம் காலி பறவையில்
வேளாண்மை கைத்தொழில் வேறுவழிகளில்
ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்
உத்தமமாக பிரதிஷ்டை பண்ணியே

ஆண்டவர் பங்காக அனைத்தையும் அவர்க்கே
அன்பர்களே தாரும் அதால் வரும்
இன்பந்தனைப் பாரும்

2
ஆலயங் கட்ட அருச்சனை செய்ய
அருட்பணி பேண தேவ
ஊழியரைத் தாங்கி உன்னத போதனை
ஓதும் நன்மை காண

ஏழைகள் கைம்பெண்கள் அனாதப்பாலர்கள்
எதுகரமற்ற ஊனர் பிணியாளர்
சாலவறிவு நாகரீக மற்றவர்
தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட

ஆண்டவர் பங்காக அனைத்தையும் அவர்க்கே
அன்பர்களே தாரும் அதால் வரும்
இன்பந்தனைப் பாரும்

3
நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்
யாவும் நமக்கீந்து நல்ல
இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து
இவ்வாறன்பு கூர்ந்து

நன்மை புரிந்த பிதாவைக் கனம் பண்ண
நம்மையும் நம்முட யாவைய மீந்தாலும்
சம்மதமே அதிலும் தசம பாகம்
தாவென்று கேட்கிறார் மாவிந்தையல்லவோ

ஆண்டவர் பங்காக அனைத்தையும் அவர்க்கே
அன்பர்களே தாரும் அதால் வரும்
இன்பந்தனைப் பாரும்

ஆண்டவர் பங்காக | Aandavar Pangaga | Tamil Christian Song | Tamil Christian Song | CSI Christ Church Ambattur, Ambattur, Chennai, Tamil Nadu, India

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in:


Don`t copy text!