நான் எம்மாத்திரம் | Naan Emmathiram / Naan Emmaththiram | Tamil Christian Song

நான் எம்மாத்திரம் | Naan Emmathiram / Naan Emmaththiram | Tamil Christian Song

இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
நான் எம்மாத்திரம்
என் வாழ்க்கை எம்மாத்திரம்

இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு
நான் எம்மாத்திரம்
என் குடும்பம் எம்மாத்திரம்

நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
உம் கரத்தின் ஈவு
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
நீர் ஈந்தும் தயவு

நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
உம் கரத்தின் ஈவு
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
நீர் ஈந்தும் தயவு

இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
நான் எம்மாத்திரம்
என் வாழ்க்கை எம்மாத்திரம்

1
ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை
ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை
ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை
ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை

ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன்
ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன்
அரியணை ஏற்றி அழகு பார்த்தீர்
அரியணை ஏற்றி அழகு பார்த்தீர்

நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
உம் கரத்தின் ஈவு
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
நீர் ஈந்தும் தயவு

நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
உம் கரத்தின் ஈவு
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
நீர் ஈந்தும் தயவு

2
என் திட்டம் ஆசைகள் சிறியதென
உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன்
என் திட்டம் ஆசைகள் சிறியதென
உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன்

தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன்
தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன்
தலைமுறை தாங்கும் திட்டம் தந்தீர்
தலைமுறை தாங்கிடும் திட்டம் தந்தீர்

நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
உம் கரத்தின் ஈவு
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
நீர் ஈந்தும் தயவு

நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
உம் கரத்தின் ஈவு
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
நீர் ஈந்தும் தயவு

இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
நான் எம்மாத்திரம்
என் வாழ்க்கை எம்மாத்திரம்

இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு
நான் எம்மாத்திரம்
என் குடும்பம் எம்மாத்திரம்

நான் எம்மாத்திரம் | Naan Emmathiram | Tamil Christian Song | Bethel Youth / Bethel AG Church, Kolathur, Chennai, Tamil Nadu, India | Benny Joshua

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!